தராபாத்

தராபாத் மெட்ரோவில் 4 மொழிகளிலும் போர்டுகள் அமைக்கப் பட்டுள்ளன

பெங்களூரு மெட்ரோவில் இந்தியில் எழுதப்பட்ட  போர்டுகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.  கன்னட மொழிக்கு முக்கியத்துவம் தரவில்லை என்பதால் பல போராட்டங்கள் எழுந்தன.   தற்போது ஐதராபாத் நகரில் மெட்ரோ சேவை துவங்க உள்ளது.   இங்கு அது போல போராட்டங்கள் வராத வண்ணம் மெட்ரோ போர்டுகள் அமைத்துள்ளது.

இங்கு துவங்கப் பட உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் தெலுங்கு,  ஆங்கிலம், இந்தி மற்றும் உருது மொழிகளில் போர்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.    புகழ்பெற்ற சுற்றுலா நகரங்களில் ஒன்றான ஐதராபாத் நகர் ஒரு பன்மொழி மற்றும் பன்முக கலாச்சாரம் கொண்ட நகரமாகும்.    இங்கு உருது பேசும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கின்றனர்.   மற்றும் இந்தி மொழிக்கு இங்கு என்றுமே எதிர்ப்புஇருந்ததில்லை.

இவ்வாறு நான்கு மொழிகளில் போர்ட் அமைக்கப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் வரவேற்பு அளித்துள்ளனர்.  இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் கேசவ ராவ், “எந்த ஓரு மொழியும் எதிர்ப்பை மீறித் திணிக்க முடியாது.   ஐதராபாத்தைப் பொறுத்த வரை தெலுங்கு எங்கள் மொழி,  இந்தி உலக மொழி, இந்தி இங்கு அதிகம் மக்களால் பேசப்படும் மொழி, உருது எங்கள் மாநிலத்தில் இரண்டாம் மொழி.   அதனால் இங்கு நான்கு மொழிக்கும் இடமுண்டு” எனத் தெரிவித்தார்.