இன்று வட இந்தியர்களின் முக்கிய பண்டிகையான கர்வாசோத் கொண்டாட்டம்

டில்லி

ட இந்தியர்களின் முக்கிய பண்டிகையான கர்வா சோத் இன்று கொண்டாடப்படுகிறது.

கர்வா தோத் என்னும் பண்டிகை வட இந்தியாவில் உள்ள இந்துக்களுக்கு முக்கியமாக திருமணமான பெண்களுக்கு முக்கியமான ஒரு பண்டிகை ஆகும்.   இது வட நாட்டு வழக்கப்படி இந்த மாதம் பவுர்ணமி முடிந்த நான்காம் நாள் கொண்டாடப்படுகிறது.   இன்று இந்தப் பண்டிகை கொண்டாடப் படுகிறது.  திருமணமான மற்றும் திருமண வயதை அடைந்த பெண்கள் இதைக் கொண்டாடுகின்றனர்.  இந்த நாளில் சூரிய உதயத்தில் இருந்து சந்திர உதயம் வரை விரதம் இருப்பார்கள்.   தங்கள் கணவன், மற்றும் கணவனாக வரப்போகிறவன் ஆகியோரின் நீண்ட ஆயுளுக்காகவும் நலனுக்காகவும் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

விரதம் இருக்கும் பெண்கள் நீர் கூட அருந்தாமல் மதியம் முழுதும் இருப்பார்கள்.  சந்திரன் உதயம் ஆனதும் சந்திரனை சல்லடை வழியாக பார்த்து விட்டு அதே சல்லடை மூலம் கணவனைப் பார்த்து விட்டு விரதத்தை முடிப்பார்கள்.   விரத்தத்தை முடிக்க கணவன் அவர்களுக்கு முதல் வாய் உணவை தன் கையால் அளிப்பது  வழக்கம்.

இந்த நாளில் பெண்கள் மணப்பெண் போல அலங்கரித்துக் கொண்டு மாலை வேளையில் சந்திரனைக் கண்டு விரதத்தை முடிப்பார்கள்.   அதற்குப் பின் மண் பானைகளில் அரிசி உளுந்து ஆகியவைகளை நிறப்பி தங்கள் மாமியாரிடம் கொடுத்து காலில் விழுந்து ஆசி பெருவார்கள்

தற்போது ஷாதி. காம் என்னும் இணைய நிறுவனம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது.   அதில் கலந்துக் கொண்ட இளைஞர்கள் பலர் தங்கள் மனைவி விரதம் இருந்து உணவு உண்ணாமல் இருப்பது தவறு எனத் தெரிவித்துள்ளனர்.   ஆனால் நவநாகரிகப் பெண்களில் பலர் இந்த விரதத்தை ஆதரித்துள்ளனர்.  ஒரு சில பெண்கள் இதே போல் தங்கள் கணவரும் தங்களுடன் விரதம் இருக்க வேண்டும் என்னும் விருப்பத்தையும் தெரிவித்துள்ளனர்.
English Summary
Today is karva chaudh day