டில்லி

ன்று கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்துச் செய்தி பதிந்துள்ளார்.

வடநாட்டில் மிகவும் புகழ் பெற்றது ஹோலிப் பண்டிகை ஆகும்.    பிரகலாதன் கதையுடன் தொடர்புடையது இந்தப் பண்டிகை.   தனது தந்தை இரணியனின் வார்த்தயை மீறி நாராயணன் நாமத்தையே ஜெபித்து வந்தவர் பிரகலதன்.   இதனால் ஆத்திரம் அடைந்த இரணியன் ஹோலிகா என்னும் அரக்கியை பிரகலாதனை மடியில் அமர்த்திக் கொண்டு தீயில் இறங்கச் சொல்கிறான்.

ஹோலிகாவுக்கு இறைவன் அளித்துள்ள வரத்தின் படி அவளை நெருப்பு ஒன்றும் செய்யாது.    ஆனால் அவள் அதர்மத்துக்கு துணை போகாதவரையே இந்த வரம் பலிக்கும்.   பிரகலாதனை கொல்லத் துணிந்ததால் அதர்மத்துக்கு துணை போனதால் ஹோலிகாவை நெருப்பு பொசுக்கி விட்டது.  அவள் இறந்தாள்.   ஆனால் பிரகலாதன் பிழைத்துக் கொண்டான்.

பிரகலாதன் பிழைத்ததை மக்கள் வண்ணங்கள் பூசி விளையாடி கொண்டடி வருகின்றனர்.    இன்று ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு வண்ணங்கள் பூசியும், வண்ண வண்ண பலூன்களை பறக்க விட்டும் வட இந்திய மக்கள் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.

ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், “அனைவருக்கும் ஹோலிப் பண்டிகை வாழ்த்த்துக்கள்”  என வாழ்த்துச் செய்தி பதிந்துள்ளார்.