தராபாத்

ன்று ஐதராபாத்தில் நடைபெறும் ஐ பி எல் போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

தற்போதைய 17 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று  ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் 18 ஆவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.  ஐதராபாத் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் வீழ்ந்தது.

ஆனால் அடுத்த ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக 277 ரன்கள் குவித்து சாதனை படைத்தடன் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இருப்பினும் கடந்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சிடம் தோற்று ஏமாற்றம் அளித்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூரில் நடந்த தனது முதல் 2 ஆட்டங்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சையும், 63 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சையும் அடுத்தடுத்து சாய்த்தது. விசாகப்பட்டினத்தில் நடந்த கடந்த லீக் ஆட்டத்தில் 20 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் வீழ்ந்தது.

தற்போது உள்ளூரில் தனது வெற்றி உத்வேகத்தை தொடர ஐதராபாத் அணியும், 3 ஆவது வெற்றியைப் பெறும் குறிக்கோளுடன் சென்னை அணியும் இன்று களம் இறங்குகின்றன. இதுவரை இவ்விரு அணிகளும் 19 முறை நேருக்கு நேர் மோதியதில் சென்னை அணி 14 முறையும், ஐதராபாத் அணி 5 தடவையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.