பெங்களூரு

ன்று நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜகவில் இணைவதாக வந்த செய்தியை அவர் மறுத்துள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஹ் அரசியலில் பா.ஜ.க. வுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறார். அவர் பல சமயங்களில் இதை வெளிப்படுத்த தயங்கியதில்லை. பிரகாஷ்ராஜ் கடந்த 2019 பொதுத் தேர்தலில் பெங்களூரு சென்ட்ரலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

தற்போதும் நடிகர் பிரகாஷ்ராஜ் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று பா.ஜ.க.வில் சேருகிறார் என தகவல் வேகமாகப் பரவியது. இந்த தகவலுக்கு பிரகாஷ்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

‘தி ஸ்கின் டாக்டர்’ என்ற ஐடி பிரகாஷ் ராஜ் இன்று மதியம் 3 மணிக்கு பாஜகவில் இணைய இருக்கிறார் என்று ட்வீட் செய்திருந்தது.

நடிகர் பிரகாஷ்ராஜ்  இந்த ட்வீட்டை கோட் செய்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், அவர்களது சித்தாந்தங்களை வைத்து தம்மை விலைக்கு வாங்கும் அளவுக்கு அவர்களுக்கு வசதியில்லை. என்றும் பாஜகவினர் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்புவதாகவும் பதிந்துள்ளார்.