டில்லி

டில்லியில் இன்று ‘இந்தியா; கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கூடுகிறது,

பாஜகவை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கொள்ளக் காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., ஆம் ஆத்மி உள்ளிட்ட 28 கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன.  இக்கூட்டணி 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை அமைத்து உள்ளது.

இன்று மாலை இந்தக் குழுவின் கூட்டம் டில்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் இல்லத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் மக்களவைத் தொகுதிகளில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவதை உறுதிசெய்யக் கட்சித் தலைவர்கள் தொகுதிப் பங்கீடு திட்டத்தை உருவாக்கத் திட்டமிடப்படும் எனக் கூறப்படுகிறது.

ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினர்களின் ஒருவரான ஆம் ஆத்மி கட்சியின். ராகவ் சதா,

”இந்தக் கூட்டத்தில் மக்களை சந்திப்பது, கூட்டணி தலைவர்களை ஒருங்கிணைத்து பொதுக்கூட்டங்களை நடத்துவது குறித்து திட்டமிடுவது மற்றும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வித்தியாசமாக இருக்கும் பிரசாரங்களை வீடு வீடாகச் சென்று மேற்கொள்வது போன்ற பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்”

எனத் தெரிவித்துள்ளார்.