சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத்  தெரிவித்துள்ளது.

தற்போது தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சியின் காரணமாகத் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்துவருகிறது.

இன்று தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கோயம்புத்தூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Today, TN, 11 districts, heavy rain,