டில்லி

திமுக உடன் கூட்டணி முறிவு ஏற்பட்டது குறித்து பாஜக மேலிடத்துக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

 

 

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக மற்றும் பாஜக இடையிலான கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ளது.  இனி எப்போதுமே பாஜகவுடன் கூட்டணி இல்லையென அதிமுக அறிவித்தது.  அண்ணாமலை சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்டோபர் 3 ஆம் தேதி இது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

இதற்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டில்லியில் பாஜக தேசிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த நாளை டில்லி செல்ல உள்ளார்.  அப்போது அவர் பாஜக தேசிய தலைவர்களுடன் கூட்டணி முறிவு குறித்து விவரமாக ஆலோசனை நடத்த உள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்து கட்சி மேலிடத்திடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.  இந்த அறிக்கையை அவர் மேலிட உத்தரவின் பேரில் தமிழக பாஜக நிர்வாகிகளிடம் கருத்துக் கேடு தாக்கல் செய்துள்ளார்.

அந்த அறிக்கையில் நிர்மலா சீதாராமன், அதிமுக பிரிவால் ஏற்பட உள்ள விளைவுகள், பாஜகவால் அதிமுக இன்றி வலுவான கூட்டணி அமைக்க முடியுமா போன்ற பல விவகாரங்கள் குறித்தும் அதிமுகவுக்கும் அண்ணாமலைக்கும் உள்ள கருத்து வேறுபாடுகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.