சென்னை

வரும் மார்ச் 1 முதல் நடைபெற உள்ள 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அனுமதிச்சீட்டு (ஹால் டிக்கட்) இன்று வெளியிடப்படுகிறது.

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் 1-ம் தேதி தொடங்குகிறது. மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம்ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. இன்று இந்த மாணவர்களுக்கான அனுமதிச் சீட்டு  வெளியிடப்பட உள்ளது.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,

”அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் இன்று பிற்பகல் முதல் www.dge.in.gov.in என்ற இணையதளத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அனுமதிச்சீட்டுக்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

இதற்கு “online portal” என்ற வாசகத்தினை ‘click’ செய்து “HIGHER SECONDARAY FIRST YEAR/ SECOND YEAR EXAM MARCH – 2024” எனக் காணப்படும் பக்கத்தில், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID, Password-ஐ பயன்படுத்தி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அனுமதிச்சீட்டைப் பதிவிறக்கம் செய்யலாம்.” 

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.