வானிலை ஆராய்ச்சிக்காக, இன்சாட் – 3டி.ஆர்., என்ற செயற்கைக்கோளை செலுத்த, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான, இஸ்ரோ திட்டமிட்டது.  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, இன்று மாலை, 4:10 மணிக்கு, இந்த செயற்கைக்கோள் ஏவப்படும். இது ஜி.எஸ்.எல்.வி., – எப்05 ராக்கெட் மூலம் செலுத்தப்பட  இருக்கிறது.
10insat-3drseenwithtwohalvesofpayloadfaringofgslv-f05
விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில், இதற்கான, 29 மணி நேர கவுன்ட் டவுன், நேற்று காலை, 11:10 மணிக்கு துவங்கியது. இந்த செயர்கைகோள் மூலம் வானிலை குறித்த பல்வேறு தகவல்களை பெற முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இது ஜி.எஸ்.எல்.வி யின் பத்தாவது ராக்கெட் ஆகும்.