சென்னை

ன்று மெரினாவில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், சென்னை மெரினாவில் ரூ.39 கோடியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி பொதுப்பணித்துறை சார்பில் கருணாநிதி நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.  இன்று புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி நினைவிடம் ஆகியவற்றின் திறப்பு நிகழ்ச்சி  இரவு 7 மணியளவில் நடைபெறுகிறது. இவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

அமைச்சர் எ.வ.வேலு இது குறித்து  செய்தியாளர்களிடம்,

“கருணாநிதி நினைவிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தவுடன் நாளை  முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் ‘கலைஞர் உலகம்’ அருங்காட்சியகத்தை ஆன்லைனில் முன்பதிவு செய்துதான் பார்வையிட முடியும். இதற்காக பிரத்யேக இணையதளம் உருவாக்கப்படும். முன்பதிவு விவரத்தை இங்கு அமைந்துள்ள சேவை கட்டிட அலுவலகத்தில் காட்டினால் கையில் ‘டேக்’ கட்டி விடுவார்கள். அதன்பின்னர் அருங்காட்சியகத்தைச் சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.

கருணாநிதி அருங்காட்சியகத்தைப் பார்வையிடுவதற்குக் கட்டணம் எதுவும் கிடையாது. இலவசமாகப் பார்வையிடலாம். கருணாநிதி அருங்காட்சியகம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். கருணாநிதி நினைவிடம் மற்றும் அருங்காட்சியகத்தின் பராமரிப்பு பணியை பொதுப்பணித்துறையே மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார் “

என்று தெரிவித்தார்.