சென்னை

ன்று முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழக  அமைச்சரவை கூட்டம்  கூட உள்ளது.

ஆண்டு தோறும் தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடைபெறுவது வழக்கம்., இந்த 2025-2026 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் இந்த மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதில் முதல் நாளில் பொது பட்ஜெட்டும், அடுத்த நாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும்.

இந்த பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் தாக்கல் செய்வார்கள்

இன்று கூடும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில், தமிழக அரசின் 2025-2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி, பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. கூட்டத்தின் முடிவில், பட்ஜெட் அறிக்கைக்கு ஒப்புதல் தரப்படும்.

2026ஆம் ஆண்டு மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலுக்கு முன்பு கடைசியாக தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் இதுதான் என்பதால், இந்த ஆண்டு பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களை கவும் வகையில் தற்போதைய பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.