சென்னை
இன்று சென்னை வெயில் 105 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
தற்போது கத்திரி வெயில் எனக் கூறப்படும் அக்னி நட்சத்திரம் நடைபெற்று வருகிறது. மொக்கா புயல் காரணமாக ஆங்காங்கே மழை பெய்ததால் வெயிலின் கொடுமை இதுவரை குறைவாக இருந்தது. இன்று மாநிலம் எங்கும் கடும் வெயிலில் மக்கள் த்வித்த்னர்.
சென்னையில் இந்த ஆண்டில் முதல் முறையாக இன்று 105.26 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியது/ வெயில் மேலும் அதிகரிக்கலாம் என்பதால் மதிய நேரத்தில் மக்கள் வெளியில் நடமாடவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதைப் போல மலைப்பகுதிகளான ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் வழக்கத்தினை விட அதிக அளவில் வெயில் அடித்துள்ளது. இதில் ஊட்டியில் வழக்கத்தை விட 7 டிகிரி அதிகமாகவும் கொடைக்கானலில் வழக்கத்தை விட 5 டிகிரி அதிகமாகவும் வெயில் அடித்துள்ளது.