ரக்காணம்

மிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை முழுமையாகத் தடுத்து நிறுத்தப்படும் என அமைச்சர் பொன்முடி உறுதி அளித்துள்ளார்

மரக்காணம் அருகே உல்ள எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 27 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்,  இவர்களில் சுரேஷ், சங்கர், தரணிவேல், ராஜமூர்த்தி ஆகிய ர் பேர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர்.  மீதம் உள்ளோர் மருத்துவமனைகளில் சிகிச்சை  பெற்று வருகின்றனர்.

இன்று கள்ளச்சாராயம் அருந்தி உயிர் இழந்தவர்களின் உடலுக்கு தமிழக அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் மற்றும் தமிழக, புதுவை மாநில அரசு அதிகாரிகள் உள்ளிடோர் அஞ்சலி செலுத்தினர்.  மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை  பெறுவோர் மற்றும் அவர்தம் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார்கள்.

பிறகு அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம், “

மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார். மேலும் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி  மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கும் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். 

கடந்த இரண்டு ஆண்டு காலமாகத் தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியுள்ளார். இருப்பினும் இதுபோன்ற ஒரு சில சம்பவங்கள் வருத்தமளிக்கின்றன. இதையொட்டி 4 காவல்துறையினர் ர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை மற்ற கவால்துறையினருக்கு பாடமாக அமையும். இது தொடர்பாக அமரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். விரைவில் மற்றவர்களும் கைது செய்யப்படுவார்கள். இனி வரும் காலங்களில் கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் விற்பனை முழுமையாகத் தடுத்து நிறுத்தப்படும்.”  

எனக் கூறி உள்ளார்.