ண்டிகர்

ன்று முதல் அரியானா மாநிலத்தில் தேர்வு செய்யப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் பேருந்து சேவைகள் தொடங்கி உள்ளன.

கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த நாடெங்கும் மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது   இதையொட்டி சாலை ரயில் மற்றும் வான்வழி போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டன.  அதன் பிறகு இரு முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு தற்போதைய மூன்றாம் கட்ட ஊரடங்கில் கொரோனா தாக்கத்தின் அளவை பொறுத்து ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

அவ்வகையில் அரியானா மாநிலத்தில் இன்று முதல் சில வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு மட்டும் பேருந்து சேவை தொடங்கி உள்ளது.   இந்த தடங்களில் பாயிண்ட் டு பாயிண்ட் முறையில் மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.   அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்வோருக்கு முன்பதிவு மற்றும் முகக் கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.   52 இருக்கைகள் கொண்ட பேருந்துகளில் 30 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சேவையில் குளிர் சாதன வசதியற்ற பேருந்துகள் மட்டுமே இயக்கபடுகின்ற்ன.  பயணிகள் பேருந்துகளில் ஏறும் முன்பு வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்டு கைகள் சுக்கிகரிக்கப்பட்டன  அத்துடன் முகக் கவசம் அணிந்த பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பேருந்துகள் மற்றும் பேருந்து முனையங்கள் சுத்திகரிக்கப்பட்ட பிறகே சேவைகள் தொடங்கின.

தற்போது அம்பாலா, ப்லானி, ஹிசார்,  கைதல், கர்னல், நர்நல், பஞ்ச்குலாம், ரேவார்,  ரோதக் மற்றும் சிர்சா அகைய 10 டிப்போக்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன  மேலும் இப்போது இயக்கப்படும் 29 தடங்களிலும் பாயிண்ட் டு பாயிண்ட் முறையில் மட்டுமே பேருந்து இயங்கிவருகின்றன.   ஒரு சில பேருந்துகளில் 12 முதல் 15 பயணிகள் மட்டுமே பயணம் செய்துள்ளனர்.