சென்னை

ன்றும் நாளையும் சென்னையில்  ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு வருடமும்  தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம், அரசின் திட்டங்கள் செயல்பாடு குறித்து , முதல்வர் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும். முதலில் தனித்தனியாகவும், அதன்பின் 2 தரப்பினரையும் இணைத்து நடத்தப்படும் இம்மாநாட்டின் இறுதியில் முதல்வர் பல்வேறு அறிவுறுத்தல்கள் மற்றும் திட்டங்களை அறிவிப்பது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான மாநாடு இன்றும், நாளையும் சென்னை தலைமைச்செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு நடைபெற உள்ளது.  மாநாட்டில் அமைச்சர்கள், அனைத்து ஆட்சியர்கள், காவல்துறை அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள், அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

முதல்வர்  இந்த  இரண்டு நாள் மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்டம் ஒழுங்கு நிலை உள்ளிட்டவை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்கிறார்.