திருநெல்வேலி

திருநெல்வேலி பகுதியில் நடைபெறும் இரட்டை ரயில் பாதைப் பணிகளால் இன்றும் நாளையும் ரயில் போக்குவரத்தில் மாற்ரம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ரயில் நிலையங்களில் இரட்டை ரயில் பாதைப் பணிகள் நடந்து வருகின்றன.  ஆகவே இவ்விரு நிலையங்களில் போக்குவரத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற உள்ளன.

இதையொட்டி ரயில் போக்குவரத்தில் இன்றும் நாளையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது,

இதில் ஒரு பகுதியாக இன்று மற்றும் நாளை பாலக்காடு – திருச்செந்தூர் ரயில் மற்றும்  திருச்செந்தூர் – பாலக்காடு ரயில் ஆகிய இரண்டும் கோவில்பட்டி – திருச்செந்த்ஹுர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 

இதைப் போல் செங்கோட்டை – நெல்லை சிரப்பு ரயில் மற்றும் நெல்லை- செங்கோட்டை சிறப்பு ரயில் அகையவை சேரன்மாதேவி – நெல்லை இடையே இன்றும் நாளையும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 

மேலும் திருவனந்தபுரம் – திருச்சி இண்டர்சிடடி  ரயில்  திருவனந்தபுரத்தில் இருந்து 40 நிமிடம் தாமதமாகக் கிளம்ப உள்ளது.