சென்னை

இன்றும் நாளையும் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்களுடன் முதல்வர் சிறப்புத் திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன.

நேற்று சென்னை மாநகராட்சி ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில்

”தமிழக அரசின் திட்டங்கள் எளிதில் மக்களைச் சென்றடையும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 5-ஆம் தேதி, 6- ஆம் தேதி  ஆகிய 2 நாட்களில் மக்களுடன் முதல்வர் முகாம்கள் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

இந்த முகாம்களில் பட்டா, ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு உள்பட பல்வேறு திட்டங்களில் பயன் பெற மக்கள் தங்கள் மனுக்களைக் கொடுத்து, தீர்வு காணலாம்.”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.