திருவனந்தபுரம்

ன்று கேரள மாநிலத்தில் கடற்கரைகளைத் தவிர மற்ற சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படுகின்றன.

நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 25 முதல் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டது.  தற்போது மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு இணங்க படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.  அவ்வகையில் பல மாநிலங்களில் பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.

அவ்வகையில் கேரளாவில் இன்று கடற்கரைகளைத் தவிர மற்ற சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படும் எனக் கேரள அரசு அறிவித்துள்ளது.   நவம்பர் 1 ஆம் தேதி முதல் கடற்கரைகளைத் திறக்க அரசு உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.  அதே வேளையில் கேரளாவில் மீண்டும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கேரள அரசு சுற்றுலாப் பயணிகளுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அவை பின் வருமாறு :

சுற்றுலா இடங்களைப் பார்வையிடும் போது பயணிகள் அனைத்து கொரோனா  தொற்று  நெறிமுறையையும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

7 நாட்களுக்குள் குறுகிய பயணங்களுக்குக் கேரளாவுக்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு சான்றிதழ் தேவையில்லை.

அனைத்து சுற்றுலாப் பயணிகளும் www.covid19jagratha.kerala.nic.in இல் பதிவு செய்ய வேண்டும்

ஏழு நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் திரும்பி வரவில்லை என்றால், அவர்கள் தங்கள் சொந்த  செலவில் கொரோனா வைரஸ் சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும்.

மாநிலத்தில் ஏழு நாட்களுக்கு மேல் செலவிட விரும்பும் சுற்றுலாப் பயணிகள் கொரோனா எதிர்மறை சான்றிதழை வைத்திருக்க வேண்டும் அல்லது மாநிலத்திற்குள் நுழைந்த உடனேயே சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும். இல்லையெனில், அவர்கள் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியிருக்கும்.

முககவசங்கள் மற்றும் சானிடிசரைப் பயன்படுத்துவது மற்றும் இரண்டு மீட்டர் சமூக தூரத்தைப் பராமரிப்பது கட்டாயமாகும்.

சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயணத்தின் போது வைரஸ் அறிகுறிகளை உருவாக்கினால், அவர்கள்  ஹெல்ப்லைனைத் தொடர்புகொண்டு சுகாதார ஊழியர்களின் உதவியை நாட வேண்டும்.