சென்னை

ரடங்கு காரணமாக மிகக் குறைந்த என்னைக்கையில் இயக்கப்பட்டு வந்த புறநகர் மின்சார ரயில்கள் இன்று 419 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாகத் தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டும் சென்னை  புறநகர் மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தனர்.  நேற்று முன் தினம் தென்னக ரயில்வே மேலும் பல தளர்வுகளை அறிவித்தது.

நேற்று முன் தினம் முதல் சென்னை புறநகர் மின்சார ரயிலில் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது.  இதையொட்டி மின்சார ரயில் சேவை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.   ஞாயிற்றுக் கிழமைகளில் முதலில் 98 மின்சார ரயில்கள் சேவை மட்டுமே இயங்கி வந்தன.  இன்று அது 419 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று மூர்மார்க்கெட்-அரக்கோணம் இடையே 149 மின்சார ரயில் சேவையும், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இடையே 66 மின்சார ரயில் சேவையும், கடற்கரை -செங்கல்பட்டு இடையே 138 மின்சார ரயில் சேவையும், கடற்கரை-வேளச்சேரி இடையே 50 சேவைகளும், ஆவடி, பட்டாபிராம்-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே 16 சேவைகளும் என 419 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும் எனத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.