சென்னை

மிழகம் முழுவதும் இன்று 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் தொடங்கி உள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்தது.  தற்போது பாதிப்பு குறைந்து வந்தாலும் ஒரு சில மாநிலங்களில் பாதிப்பு குறையவில்லை.   மேலும் மூன்றாம் அலை கொரோனா பாதிப்பு விரைவில் தாக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையொட்டி நாடெங்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  கடந்த ஜனவரி மாதம் இந்த பணியைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.  தற்போது மத்திய அரசு தடுப்பூசிகளை மொத்தமாகக் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது.   அனைத்து மாநில அரசுகளும் கொரோனா தடுப்பூசி போடுவதில் தீவிரம் காட்டி வருகின்றன.

அவ்வகையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இன்று தமிழகிஅம் எங்கும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது.  மொத்தம் 40000 முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இதில் சென்னையில் மட்டும் 1600 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த 40,000 முகாம்கள் இரவு 7 மணி வரை இயங்க உள்ளன. இன்று மட்டும் சுமார் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட தமிழக அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.   இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதோர் இதைப் பயன்படுத்திட வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது.