டெல்லி:
ந்தியாவில் இன்று மேலும், 37,148 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிக்கப்பட் டோர் மொத்த  எண்ணிக்கை 11,55,191ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.  கடந்த சில நாட்களாக தொற்று பரவல் உச்சமடைந்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 37,148 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,55,191ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரேநாளில் மேலும் 587 போ உயிரிழந்தனா். இதனால், கொரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 28,084 ஆக அதிகரித்துவிட்டது.
தற்போதைய நிலையில் நாடு முழுவதும் 4,02,529 பேர் கொரோனா நோய் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை  7,24,578 போர் நோய் தொற்றில் இருந்து  குணமடைந்துவிட்டனா்.
ஜூலை 20-ஆம் தேதி நிலவரப்படி இதுவரை 1கோடியே 43 லட்சத்து 81 ஆயிரத்து 303 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 3,18,695 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.