ஜெய்ப்பூர்

ன்று அதிகாலை ராஜஸ்தானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது/

இன்று அதிகாலை 4.09 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது.  தேசிய நிலநடுக்க மையம் இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என்றும் உயிர்ச்சேதம் அல்லது சேதங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து 3 முறை அரை மணி நேர இடை வெளியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் அதிகாலை 4.09 மணிக்கும் இரண்டாவது நிலநடுக்கம் 4.22 மணிக்கும் அடுத்த மூன்று நிமிடங்களில் அதாவது 4.25 மணிக்கு 3-வது நிலநடுக்கமும் ஏற்பட்டது.

இவ்வாறு அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் திடுக்கிட்டு எழுந்த மக்கள் வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்ததை காண முடிந்தது.