To reduce fuel usage, petrol pumps to be shut on Sundays May 14 onwards
அடுத்த மாதம் 14ஆம் தேதி முதல் ஞாயிறுதோறும் பெட்ரோல்பங்குகளுக்கு விடுமுறை அளிக்க இந்திய பெட்ரோலிய டீலர்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. மேலும், ஒரு நாளைக்கு 10 மணி நேரம் மட்டுமே பெட்ரோல் பங்குகளைத் திறந்து வைக்கவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைக்குரிய வாகனங்களுக்ககு விதிவிலக்கு இரு பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரதமரின் அறிவுறுத்தலை ஏற்று பெட்ரோல், டீசல் டீலர்கள் கூட்டமைப்பு இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, டீலர்களுக்கான கமிஷனை உயர்த்தித் தரக்கோரி அடுத்த மாதம் 10ஆம் தேதி பெட்ரோல் பங்குகளை மூடவும், டீலர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.பெட்ரோலிய டீலர்களின் கூட்டமைப்பு தலைவர் ஏ.டி.சத்யநாராயணன் இந்தத் தகவலைத் தெரிவித்திருப்பதாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.