பணமதிப்பிழப்பு நடவடிக்கை நேர்மையானவர்களையே பாதித்துள்ளது: நாடாளுமன்றக் குழு நறுக்!

Must read

Note ban made honest, hardworking taxpayers suffer: Parliamentary committee

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நேர்மையாக உழைத்து முறையாக வரிகட்டுவோரும், ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் டி.சுப்பிரமணியன் ரெட்டி தலைமையிலான அந்தக் குழு பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பான தமது ஆய்வறிக்கையை மாநிலங்களவையில் திங்கள் கிழமை தாக்கல் செய்தது. அதில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், கருப்புப்பணம், வரிஏய்ப்பு, ஊழல், பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவுதல் போன்றவை கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும், சாமானிய மக்களைக் கடுமையாக பாதித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன், உற்பத்தித்துறையும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக அந்தக் குழுவின் அறிக்கை கூறியுள்ளது. இதனை தடுக்க நிதியமைச்சகம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அந்தக் குழு வலியுறுத்தி உள்ளது.

More articles

Latest article