டில்லி,

னியார் மற்றும் அரசு உட்பட அனைத்துப் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்குமான நாடு முழுவதும் நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இதுகுறித்து ஏற்கனவே  மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு கட்டயமாக்கப்படுள்ள நிலையில் தற்போது பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கும் நீட் தேர்வை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வருகிற 2018-19 ஆம் கல்வி ஆண்டில் இதை அமல்படுத்தும் வகையில் விதிமுறைகளை வகுக்க, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

பொறியியல் இளநிலை படிப்புகளில் ஒரே நுழைவுத் தேர்வை ஏற்படுத்த அண்மையில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அடுத்தக்கட்டமாக தொழில்நுட்ப கல்வி மையங்களையும் இதுபோன்ற நாடுதழுவிய நுழைவுத் தேர்வின் கீழ் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சில சுயநிதிக்  கல்லூரிகளில் நடக்கும் முறைக்கேடுகளைத் தடுக்க இந்த  நுழைவுத் தேர்வு என்று மத்திய அரசாங்கம் கூறுகிறது.

இதன் மூலம் கல்லூரிகளில் நடைபெறும் அட்மிஷன் முறை வெளிப்படையாக இருப்பதோடு, தனியார் கல்லூரிகள் அதிகளவில் கட்டணம் வசூலிப்பதையும் தடுக்கமுடியும் என  கூறப்படுகிறது.

இந்த நுழைவுத் தேர்வு வருகிற 2018-ஆம் ஆண்டில் அமலுக்கு வரும் என்று நம்பப்படு கிறது.

இதுநடைப்படுத்தினால், அனைத்து அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் படிப்பதற்கு நுழைவு தேர்வு எழுத வேண்டியது அவசியம். மேலும் தற்போது நீட் தேர்வுக்கு எப்படி ஜேஈஈ தகுதி தேர்வு எழுதுகிறார்களோ, அதுபோல பொறியியல் சேர்வதற்கும் தகுதி தேர்வு எழுத வேண்டும்.