சென்னை: தமிழகம் முழுவதும் நாளை (24-ம் தேதி),  7382 காலி பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை டிஎன்பிஎஸ்சி  நடத்துகிறது.

தமிழ்நாட்டில் அரசு பணிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி, தகுதியான நபர்களை தேர்வு செய்து வருகிறது. அதன்படி, தற்போது  நான்காம் நிலை பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 தேர்வை நடத்தி வருகிறது.

7 விதமான பதவிகளைக் சேர்ந்த 7382 காலி இடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. அவை, இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman).  பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த  குரூப் 4 தேர்வுக்கு 22 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். நாளை தமிழகம் முழுவதும் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் உள்ள 7,689 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது.  7382 காலி இடங்களுக்கு  22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போட்டியில் இறங்கி உள்ளதால், போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது