தமிழக அரசு வேலை:  5 ஆயிரம் இடங்களுக்கு தேர்வு

Must read

a

சென்னை:
மிழக அரசின் 5,451 காலிப் பணியிடங்களுக்கான, குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு உள்ளது.  இந்த  பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு நடக்க இருக்கும் பணிகளின் எண்ணிக்கை…
இளநிலை உதவியாளர் ( பிணையமற்றது) – 2345
இளநிலை உதவியாளர் ( பிணையமுள்ளது ) – 121
வரி தண்டலர் – 8
நில அளவர் – 532
வரைவாளர் – 327
தட்டச்சர் – 1714
சுருக்கெழுத்து தட்டச்சர் – 404
தேர்வு அட்டவணை:
விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற செப்டம்பர் மாதம் 8.
தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி வருகிற செப்டம்பர் மாதம் 11.
தேர்வு நாள் நவம்பர் மாதம் 6.
விருப்பமுள்ளவர்கள் www.tnpscexams.net/www.tnpscexams.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

More articles

Latest article