மின் வாரிய ஊழியர்கள் பிப் 16 முதல் வேலை நிறுத்தம் ?

Must read

சென்னை

ரும் 12 ஆம் தேதிக்குள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 16ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் என மின்வாரிய ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை உடனே நிரப்புதல், ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்தல் உட்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் மற்றும் மின்வாரிய கூட்டு சங்கங்களின் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இன்று தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் சுப்ரமணியன் , “வரும் 8ம் தேதி தமிழகத்திலுள்ள நான்கு மண்டலங்களிலும் மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். வரும் 12ம் தேதிக்குள் மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.   அப்படி இல்லையென்றால் வரும் 16ம் தேதி முதல் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் மின்வாரிய கூட்டு சங்கங்களின் சார்பில் சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மாநிலம் தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடு  உள்ளனர்.  மின் ஊழியர்க்ளின் இந்த போராட்டம் கால வரையற்ற வேலை நிறுத்தமாக மாறுவதும் மாறாமல் இருப்பதும் தமிழக அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்து அமைய உள்ளது” எனத் தெரிவித்தார்.

More articles

Latest article