சென்னை:

மிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கிய நிலையில், முதல் கட்டமாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதன்படி 101 மாணவர்கள் தாங்கள் விரும்பிய கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடப்பு ஆண்டு தமிழக தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது.   தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நேரடி கலந்தாய்வு நேற்றுதொடங்கியது. முதல் நாளான நேற்று  சிறப்பு பிரவினர்கள் கலந்தாய்வில்  கலந்து கொண்டனர்.

காலை 9.30 மணிக்கு கலந்தாய்வை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து மாலை  4.30 மணி வரையில் நடைபெற்றது.

நேற்றைய கலந்தாய்வில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்திருந்த 143 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 32 மாணவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ள வில்லை. இந்த நிலையில் கலாந்தாய்வில் கலந்துகொண்ட 101 பேருக்கும்  அவர்கள் விரும்பிய கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டது.