சென்னை: பாலிடெக்னிக் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் இன்று வெளியிட்டு உள்ளது.  முதலாம் ஆண்டு, 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

https://t.co/zXnjJSVCTR என்ற இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள லாம்.
தமிழகத்தில் கொரோனாவால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.  இந்த நிலையில்,  11ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையும், பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையும் ஆகஸ்ட் 24ந்தேதி தொடங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்தது. இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இதை யடுத்து, வரும் 30ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என தமிழகஅரசு அறிவித்தது.
அதன்படி இன்று பாலிடெக்னிக் தேர்வு முடிவுகளை தொழில்நுட்ப கல்வி இயக்கம் இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது. முதலாம் ஆண்டு, 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம் என்று கூறி உள்ளது.