சென்னை:
2020 – 2021ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் ஏழைமக்களுக்காக குடியிருப்புகள் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிரதமர் நகர்புறத் திட்டத்தின் கீழ் 1,12, 876 தனி வீடுகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 65,290 அடுக்குமாடி வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
முதல்வரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் புதிதாக 20 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும். இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் மேலும் 2 லட்சம் வீடுகள் கட்டப்படும். அதற்காக ரூ. 3099,77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் 5 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவியை உலக வங்கியிடமிருந்து பெற்று செயல்படுத்தப்படும்
நகர்ப்புற ஏழை, எளியவர்களுக்கான நிலைக்கத்தக்க வீட்டுவசதி மற்றும் உறைவிடத் திட்டம் செயல்படுத்தப்படும்
மேலும், திறன்மிகு நகரங்கள் திட்டங்களை செயல்படுத்த ரூ.1650 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5306.95 கோடி ஒதுக்கீடு
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.6754.30 கோடி ஒதுக்கீடு