சென்னை:

மிழ்நாடு அரசின் 2020 – 2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் வேளாண்மைத் துறைக்கு மொத்தமாக ரூ. 11,894 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண்துறைக்கு ரூ.11,894.48 கோடி  ஒதுக்கீடு

உழவர் பாதுகாப்புக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு

வரும் நிதி ஆண்டில் கூட்டுறவு அமைப்புகள் மூலம் விவசாயகளுக்கு ரூ.11 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்படும்

அரசு தமிழ்நாடு உழவர் உற்பத்திக் கொள்கை மூலம் மேலும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்.

கரும்பு விவசாயம் நுண்ணீர் பாசனத் திட்டங்களுக்கு 75 கோடி ஒதுக்கீடு

சரபங்கா நீர் பாசனத்திட்டத்திற்கு கூடுதலாக ரூ.350 கோடி ஒதுக்கீடு

சேலம், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல் உள்பட 8 மாவட்டங்களில்  வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள்  அமைக்கப்படும்

திருந்திய நெல் சாகுபடி முறை 27.18 லட்சம் பரப்பளவிற்கு விரிவுபடுத்தப்படும்

906 குளங்கள், 183 அணைக்கட்டுக்கள் சீரமைத்தல், 37 செயற்கை செறிவூட்டல் கிணறுகள் அமைக்க ரூ.649 கோடி ஒதுக்கீடு

உழவர் சந்தைகள், கூட்டுறவு நிறுவனங்கள் அதிகரிக்கப்படும்.

கரும்பு விவசாயம் நுண்ணீர் பாசனத் திட்டங்களுக்கு 75 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருந்திய நெல் சாகுபடி முறை 27.18 லட்சம் பரப்பளவிற்கு விரிவுபடுத்தப்பட உள்ளது.

காவிரி  வெள்ளாறு இணைப்பு கால்வாய் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

உழவர் சந்தைகள், கூட்டுறவு நிறுவனங்கள் அதிகரிக்கப்படும்.

விவசாயிகளின் சந்தேகங்களை தீர்ப்பதற்காக உழவர் – அலுவலர் திட்டம் தொடங்கப்படும்

திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் 77.94 கோடி ரூபாய் மதிப்பில் மெகா உணவு பூங்கா அமைக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தென்காசியில் எழுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும்.

உழவர் உற்பத்திக் கொள்கை மூலம் மேலும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும். உழவர்- அதிகாரி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

அத்திகடவு -அவினாசி திட்டம், காவிரி -குண்டாறு திட்டம் ஆகியவற்றிற்கும் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது.

கரும்பு விவசாயிகளிடம் நுண்ணீர் பாசனத்தை ஊக்குவிக்க ரூ.75 கோடி ஒதுக்கீடு

டன் ஒன்றுக்கு ரூ.100 என்கிற வீதத்தில் அரவைக் கால போக்குவரத்து மானியம் வழங்க ரூ.110 கோடி

புதிதாக 45 உழவர் – உற்பத்தியாளர்கள் அமைப்புகள் ஏற்படுத்தப்படும்

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்திற்கான மாநில அரசின் பங்களிப்பு ரூ.724 கோடியாக உயர்வு

ரூ.1845 கோடி செலவில் 7.41 லட்சம் ஏக்கர் நிலங்கள் நுண்ணீர்ப் பாசன வசதி பெறும்

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும்

பூச்சி மேலாண்மை நடவடிக்கை மேற்கொள்ள ரூ.20 கோடி

நெல், சிறுதானியம், பயறு வகைகள், பருத்தியில் அதிக விளைச்சல் தரும் ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும்

கல்லணை கால்வாய் அமைப்பு பணிக்கு ரூ.300 கோடி

கரும்பு அரவைக் காலத்திற்கு டன் ஒன்றுக்கு ரூ.110 கோடி போக்குவரத்து மானியம் வழங்கப்படும்

324 மெட்ரிக் டன் காய்கறி விதைகள் வழங்கப்படும்

நீர் பாசனத்திற்காக 6,991 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு

இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.