சென்னை:

மிழகத்தில் முத்திரைத்தாள் வரி 1 சதவீதத்திலிருந்து 0.25 சதவீதமாக குறைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் இன்று 20201-21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை துணைமுதல்வரும், நிதிஅமைச்சருமான ஓபிஎஸ் 10வது முறையாக தாக்கல் செய்தார்.

அதில் முத்திரைத்தாள் வரி 1 சதவீதத்திலிருந்து 0.25 சதவீதமாக குறைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும்

பட்டா மாறுதல் பணியை விரைவுபடுத்தும் வகையில் நில அளவைப் பணிகளை மேற்கொள்ள வி.ஏ.ஓ.-க்களுக்கு அதிகாரம்

நில அலுவலர் பணி உருவாக்கப்படும்

நெடுஞ்சாலைத்துறையில் புதிதாக சாலைப் பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்படும்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிட்லப்பாக்கம் ஏரியை மீட்டெடுக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு.

சிறு-குறு, நடுத்தர தொழில்களுக்கான வட்டி மானியம் 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்படும்

ஜவுளித்துறைக்கு ரூ.1,224 கோடி நிதி ஒதுக்கீடு

தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.1,53 கோடி நிதி ஒதுக்கீடு

இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.281 கோடி நிதி ஒதுக்கீடு

மகளிர் நல திட்டங்களுக்கு ரூ.78,796 நிதி ஒதுக்கீடு

அல் கெப்லா குழுமத்தின் பெட்ரோலிய சுத்திகரிப்பு வளாகம் ரூ.49,000 கோடி செலவில் அமைக்கப்படும்

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.1,064 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தின் 37 மாவட்டங்களிலும் முதியோர் ஆதரவு மையங்கள் தொடங்கப்படும்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு ரூ.375 கோடி ஒதுக்கீடு

ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்களின் உயர்கல்வி ஊக்கத்தொகைக்கான மத்திய அரசின் தொகை குறைப்பு

விழுப்புரம் அழகன்குப்பம், செங்கல்பட்டு ஆலம்பரைக் குப்பத்தில் மீன்பிடித்துறைமுகம் அமைக்க ரூ.235 கோடி

ஊரக வளர்ச்சித்துறைக்காக ரூ.23,161 கோடி நிதி ஒதுக்கீடு

குடிமராமத்து திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.