IIT_01

கடந்த ஐந்து ஆண்டுகளாக, தேசிய அளவிலான நுழைவுத்தேர்வான ஐ.ஐ.டி.ஜே.ஈ.ஈ(IIT-JEE) போட்டித்தேர்வில் தமிழகத்தில் இருந்து தேர்ச்சி பெறுவோர் என்ணிக்கை குறைந்துவருவது மிகவும் கவலைஅளிக்க்கக் கூடிய விசயமாகும்.
இந்த நிலைமை தொடர்ந்தால், தேசிய மருத்துவ நுழைவுத் தேர்விலும் (NEET) தமிழக மாணவர்கள் சோபிப்பது மிகவும் கடினமானதாக இருக்கும். நமது தமிழக மாணவர்கள் NEET தேர்வில் சிறப்பாக வெற்றிபெற நமது வாழ்த்துக்கள். ஆனால் உண்மை நிலவரத்தை நாம் உதாசீனப்படுத்த முடியாது.

IIT 03A2011 ஆம் ஆண்டில் நுழைவுத்தேர்வு எழுதிய 9514 மாணவர்களில் 207 பேர் வெற்றிப்பெற்றனர். 2012ஆம் ஆண்டில் 10187 மாணவர்களில் 273 பேர் வெற்றி பெற்றனர்.  2013ல் அதிசயமாக 22073 மாணவர்களில் 11019 பேர் வெற்றி பெற்றனர். 2015ஆம் ஆண்டில் மிகவும் குறைவாக  9974 மாணவர்களில் 188 பேர் மட்டுமே வெற்றிபெற்றனர். அதிலும் 09 மட்டுமே மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்றவர்கள்.  அதாவது வெறும்  4.8 % சதவிகிதம் மட்டுமே.

 

IIT 13
கடந்த ஆண்டு ஐ.ஐ.டி களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 188 மாணவர்களில் வெறும் 09 மாணவர்களே தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்றவர்கள்.

IIT ENTRANCE TAMILNADU 1

கடந்த ஐந்து ஆண்டுகளில் மாணவர் தேர்ச்சி விகிதம் மிகக் குறைவு. 2012ல் 2.67%  மாணவர்களும், 2013ல் 49.9%  மாணவர்களும், 2015ல் 1.88% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

IIT 01
தமிழக மாணவர்கள் (CBSE மற்றும் மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்ற) சோபிக்கத்தவறியதற்கு, தமிழக ஆட்சியாளர்களின் அலட்சியம் காரணமா?

எந்த மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் அதிகம் ஐ.ஐ.டி.யில் பயில்கின்றனர் ?

9974 5930 793 678 671 300 188
ஐ.ஐ.டியில்
மொத்த இடங்கள்
(2015)
CBSE ஆந்திரா பாடத்திட்டம் மகாரஸ்திரா
பாடத்திட்டம்
ராஜஸ்தான்
பாடத்திட்டம்
தெலங்கான
பாடத்திட்டம்
தமிழ்நாடு
பாடத்திட்டம்

IIT 1ஐஐடியில் 2015 ஆண்டில் மொத்த இடங்கள் 9974 ஆகும். அதில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ச்சி பெற்றோர் 188. இது வெறும் 2.2% ஆகும். அதிகப் பட்சமாக ஆந்திரா பாடத்திட்டத்தில் இருந்து 9.26% மாணவர்கள் ஐ.ஐ.டி.யில் சேர்ந்துள்ளனர்.

 
 
 
 
 
 
IIT 09தமிழக மருத்துவக் கல்லூரிகளில், தமிழக அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்கள் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. இது நமது தமிழக மாணவர்கள் கல்வி பயின்று தமிழத்தில் பணியாற்ற உற்சாகப்படுத்தும். ஆனால் தற்பொழுது இந்தியாவின் பிற பகுதியில் இருந்து இங்கு பயின்று தமிழகத்திற்கு சேவையாற்ற மாட்டார்கள் என்று கல்வி விமர்சகர்கள் கருதுகின்றனர்.