சென்னை:
லைப்புலி தாணு தயாரிப்பில் வெளியாகும் ரஜினியின் கபாலி படம் வருகிற 22ந்தேதி உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது. முதல் காட்சி தமிழகத்தில் வெளியிடாதது ரஜினி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
kabali=1
ரஜினி நடித்துள்ள கபாலி படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 2 கோடிக்கு மேல் ரசிகர்களால் பார்க்கப்பட்டு ரெக்கார்டு செய்துள்ளது. லிங்கா டீசரைவிட கபாலி டீசர் அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்டது. இது ரசிகர்களிடைய படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.
வரும் 22ந்தேதி வெள்ளிக்கிழமை வெளிவர இருக்க கபாலி படத்தின் சிறப்புக் காட்சிக்கான டிக்கெட்டுகள் ◌அனைத்தும் ஏற்கனவே விற்று முடிந்து விட்டன. படம் வெளியாகும் அனைத்து நாடுகளிலும் சில மணி நேரங்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன என்பது உலக அதிசயமே.
kabali8-600
இதற்கிடையில்  கபாலி படத்தின்  முதல் காட்சியை பார்க்க ரஜினியின் ரசிகர்கள், ரசிகர் மன்ற தலைவர்கள் இப்போதே தியேட்டர்களுக்கு அலைமோத ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் முதல் காட்சியை பார்க்கும் வாய்ப்பு நமது நாட்டு ரசிகர்களுக்கு இல்லை. தமிழக ரசிகர்கள் வஞ்சிக்கப்பட்டு உள்ளனர். முதன் முதல் காட்சியை பார்க்கும்  அதிர்ஷ்ட வாய்ப்பு மலேசிய ரசிகர்களுக்கே  கிடைத்துள்ளது. இந்த முடிவு ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மலேசியாவில் முதல் காட்சியை வெளியிட அயங்கரன்  நிறுவனம்  முடிவு செய்துள்ளது. வரும்  21-ம் தேதி இரவு இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு கபாலியின் முதல் காட்சி  திரையிடப்படுகிறது.. அதேபோல் ஜூலை 21 இரவு 8.30 மணிக்கு பிரான்ஸ் தலைநகர்  பாரிஸில் உள்ள ரெக்ஸ் சினிமாஸில்  திரையிடப்படவுள்ளது. ஒரே சமயத்தில் 2800 அமர்ந்து படம் பார்க்கும் அளவுக்கு  ஐரோப்பாவின் மிகப்பெரிய அரங்கம்  இது என்பது குறிப்பிடத்தக்கது.