டில்லி

ன்று மேகதாது அணை விவகாரம் குறித்து தமிழக அமைச்சர் துரைமுருகன் மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை சந்திக்கிறார்.

தமிழகத்தில் அனடை மாநிலங்களான கர்நாடகா, கேரளாவுடன் நதிநீர் பிரச்சினைகள் தொடர்கின்றன.  இதில் கர்நாடகாவுடனான காவிரி நீர்ப் பிரச்சினைக்கு காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள நீர் திறப்பு உத்தரவால் தீர்வு காணப்பட்டுள்ளது.   ஆனால் கர்நாடகா உறுதி அளித்தபடி நீர் திறக்காமல் தட்டிக் கழித்து வருகிறது.

இந்நிலையில் கர்நாடக அரசு காவிரிக்குக் குறுக்கே மேகதாது பகுதியில் அணை ஒன்றைக் கட்ட திட்டமிட்டுள்ளது.   இதனால் தமிழகத்துக்கு வரும் நீர்வரத்து மிகவும் பாதிப்படைய வாய்ப்புள்ளது.  இதையொட்டி தமிழக அரசு இதை எதிர்த்து வருகிறது.  இந்த அணை கட்ட ஒத்துழைப்பு தர வேண்டி கர்நாடக முதல்வர் எழுதிய கடிதத்துக்கு ஒப்புதல் தர முடியாது என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மறுத்துள்ளார்.

இந்நிலையில் இன்று டில்லியில் தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை சந்தித்துப் பேச உள்ளார்.  அமைச்சர் துரைமுருகன் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்ற கருத்தை ர் வலியுறுத்த உள்ளார்  மேலும். தென்பெண்ணையாற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியில் கர்நாடகம் அணைக் கட்டியது குறித்தும் ஆலோசித்து, நடுவர் மன்றம் அமைக்கவும் அவர் கோரிக்கை வைக்க உள்ளார்.