டில்லி

இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்டு டில்லி வந்த தமிழர்களை தமிழகத்துக்கு அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடுகள் செய்துள்ளது.

இன்று 7 ஆம் நாளாக இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலில் பல இந்தியர்கள் சிக்கிக்கொண்டனர். மத்திய அரசு அவர்களை மீட்க தீவிர முயற்சி எடுத்து வந்தது.  எனவே இஸ்ரேலில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.

நேற்று டில்லியில் இருந்து நேற்று இஸ்ரேலுக்கு முதல் மீட்பு விமானம் அனுப்பப்படு முதல் கட்டமாக விமானம் மூலம் முதல் கட்டமாக 212 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இன்று காலை இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு முதல் மீட்பு விமானம் இன்று காலை டெல்லி வந்தடைந்தது.

டில்லி விமானநிலையம் வந்தடைந்த இந்தியர்களை மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் நேரில் சென்று வரவேற்றார்.  இவ்வாறு இஸ்ரேலில் இருந்து விமானம் மூலம் மீட்கப்பட்டு டில்லி வந்த 212 இந்தியர்களில், 21 பேர் தமிழர்கள் ஆவார்கள்

இந்த 21 பேரைச் சென்னை, கோவை அழைத்து வரத் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இன்று பிற்பகல் டில்லியில் உள்ள தமிழக அரசு அதிகாரிகளால் 14 பயணிகள் சென்னைக்கும், கோவைக்கு 7 பேரும் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.