டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டினை மீட்பது தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள சிறப்பு குழுவினர்,  நாளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கரை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரை;ன மீது ரஷ்யாத இன்று  9-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. இதன் காரணமாக அங்கு மருத்துவ படிப்புக்காக சேர்ந்த பல ஆயிரம் இந்திய மாணவர்கள், அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணியில் இந்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இநத் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை தமிழக மீட்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்காக குழுவை அமைத்துள்ளது.  இந்த குழுவினர்,. தமிழக மாணவர்களை விரைந்து அழைத்து வருவதற்கு ஏதுவாக, மேற்படி நாடுகளுக்குச் சென்று, அங்குள்ள இந்தியத் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம். அப்துல்லா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் 4 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களும் இணைந்து சென்று ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து தமிழக குழுவினருக்கு வெளியுறவு அமைச்சகம் அனுமதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறைக்கு கடிதம்  எழுதி இருந்தார்.

இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க உருவாக்கப்பட்ட தமிழக குழு நாளை காலை 11 மணிக்கு டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்கிறார்கள். அப்போது, உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.