ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தக்கூடாது என்று தமிழக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.

இந்த செய்தியை மேற்கோள்காட்டி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக-வினர் தமிழக அரசு மீது அவதூறு பரப்பி வருகின்றனர்.
இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, ஒன்றிய அமைச்சரின் இந்த கீழ்த்தரமான செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழக அரசு மீது அவதூறு பரப்பும் வகையில் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் பொய் செய்தி வெளியிட்ட நாளிதழ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
[youtube-feed feed=1]தமிழக அரசு மீது அவதூறு… நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் சேகர் பாபு கண்டனம்…