கருணாநிதி பிறந்த தினத்தன்று மக்களுக்கு 13 வகை மளிகை பொருட்கள் வழங்கல்

Must read

சென்னை

ருணாநிதி பிறந்த நாள் அன்று மக்களுக்கு 13 வகை மளிகை பொருட்களை கொரோனா நிவாரணமாகத் தமிழக அரசு வழங்குகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இதையொட்டி மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.   தமிழக அரசு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 அளிப்பதாக அறிவித்தது.  இதில் முதல் தவணையாக ரூ.2000 தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

வரும் ஜூன் 3 ஆம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினத்தை முன்னிட்டு மீதமுள்ள ரூ.2000 வழங்கப்பட உள்ளது.  இந்நிலையில் கொரோனா நிவாரணமாகப் பொதுமக்களுக்கு 13 வகை மளிகைப் பொருட்களை வழங்க உள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதில் கோதுமை மாவு, உப்பு, ரவை, பருப்பு வகைகள், புளி சர்க்கரை, கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தோள், குளியல் சோப்பு, துவைக்கும் சோப்பு ஆகியவை அடங்கும்.  இந்த பொருட்கள் வழங்கும் திட்டம் வரும் ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதி பிறந்த நாள் அன்று தொடங்கப்பட உள்ளது.

More articles

Latest article