சென்னை: டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் தனித்துறை தொடங்க ரூ.5 கோடி வைப்பு நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து,  சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2021-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதுகள் மற்றும், விடுதலை ராஜேந்திரன், நெல்லை செ.திவான், நா.மம்மது உட்பட 8 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி உரிமைத்தொகையை வழடஙகினார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் புதுதில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்,’தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறை உருவாக்கிட ரூ.5 கோடிக்கான காசோலையை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணை வேந்தரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வழங்கினார்.

தொடர்ந்து, மறைந்த நெல்லை கண்ணன், கந்தர்வன், சோமலே, விருதுநகர் ராசய்யா, தஞ்சை பிரகாஷ் நூல்களும் நாட்டுடைமையாக்கப்பட்டது. தமிழ் மொழி வளர்ச்சி, சமூக முன்னேற்றத்துக்கு பாடப்பட்ட தற்காக 8 அறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி ரூ.1 கோடி நூல் உரிமைத் தொகையை முதலமைச்சர் வழங்கினார்.

2021-ம் ஆண்டுக்கான தமிழ் செம்மல் விருதுகளை 38 தமிழ் அறிஞர்களுக்கும், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளை 10 நபர்களுக்கும் முதலமைச்சர் நேரடியாக வழங்கினார். . தொடர்ந்து 2021-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதுகளை 38 தமிழறிஞர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.

செங்கல்பட்டை சேர்ந்த எழுத்தாளர் சுப்பிரமணியன் உட்பட மாவட்டத்துக்கு ஒருவர் விதம் 38 பேருக்கு தமிழ்ச்செம்மல் விருது வழங்கப்பட்டது.. புதுக்கோட்டையை சேர்ந்த மறைந்த தமிழறிஞர் வீ.கே.கஸ்தூரிநாதனுக்கு தமிழ்ச்செம்மல் விருது வழங்கப்பட்டது.  குழந்தை எழுத்தாளர் செ.சுகுமாரன் உட்பட 10 பேருக்கு 2021-ம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கப்பட்டது.