சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்களின் கூட்டம் வரும் 24 ஆம் தேதி நடைபெறும் என அமைச்சரும், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்களின் கூட்டம் வரும் 24 ஆம் தேதி(சனிக்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். இதையும் படிக்க | தெற்கு ரயில்வேயில் 964 பணிகளில் 80 சதவீதம் வட இந்தியர்களுக்கு தாரை வார்ப்பதா? ராமதாஸ் கேள்வி இந்த கூட்டத்தில் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.