சென்னை

மிழக அரசின் குரூப் 4 காலிப் பணியிட எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் பலவேறு துறைகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது.  இந்த தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ம் தேதி நடைபெற்றது.

இதில் 7,301 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடந்தது.  இத்தேர்வை 15 லட்சம் பேர் எழுதினர். கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த வெளியானது. டி என் பி எஸ் சி  முதலில் 7,301 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்திய நிலையில் பின்னர் மறு அறிவிப்பாணை வெளியிடப்பட்டு 10,117 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்தது.

ஆயினும் காலிப் பணியிடங்களை மேலும் உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.  இதை ஏற்று, இரண்டாவது முறையாக குரூப் 4 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது . ஏற்கனவே எண்ணிக்கை 10,117ஆக இருந்த நிலையில், தற்போது 10,748ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.