அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தற்போது 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 42 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

மேலும், இந்த உயர்வு 2023 ஏப்ரல் 1 ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இனிவரும் காலங்களில் மத்திய அரசு அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் அதைப் பின்பற்றி தமிழ்நாடு அரசும் செயல்படுத்தும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.