சென்னை: குட்கா, பான் மசாலாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். ஆண்டுதோறும் இது தொடர்பான அறிவிப்பாணைகளும் பிறப்பிக்கப்பட்டு வந்தன. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழகஅரசின் தடையாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருவாரூரில் செய்தியளார்களை சந்தித்த அமைச்சர் மா.சு.ப்பிரமணியன்,  குட்கா, பான் மசாலாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படும் என கூறினார்.