சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்களுடன் 2 நாள் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் நடத்துகிறார். அதன்படி,   பிப்ரவரி 1, 2ந்தேதிகளில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

குறிப்பிட்ட 4 மாவட்டங்களில்,  அரசின் திட்டங்கள் மற்றும்  சட்டம் ஒழுங்கு, போதை பொருள் நடமாட்டம் உள்பட  பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும், இதுவரை அறிவிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்படும் என தெரிகிறது.