சென்னை

மிழக ஆளுநர் ஆர் என் ரவி மக்களுக்கு இன்று தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இன்று உலகெங்கும் உள்ள தமிழர்கள் புத்தாண்ட் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.  அவர்களுக்கு அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி,

தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் அனைவருக்கும் குறிப்பாக எனது தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு அன்பான நல்வாழ்த்துக்கள். புத்தாண்டு அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, வெற்றி மற்றும் நிறைவை அளிக்கட்டும். புதிய உத்வேகம், ஆற்றல் மற்றும் உற்சாகத்துடன் தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக நம்மை மீண்டும் அர்ப்பணிப்போம். ”

என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.