ஊர் பெயர்களை தமிழில் மாற்றியது கைவிடல் – அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு

Must read

சென்னை:
ர் பெயர்களை தமிழில் மாற்றி அமைத்து வெளியிட்ட அறிவிப்பை திரும்பப் பெறுவதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஊர் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவதில் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இப்படி ஊர்ப்பெயரை மாற்றும் அரசாணை இப்பொழுது அவசியமா? என்ற கேள்வி எழும்பியது.

அதுமட்டுமில்லாமல் தமிழில் உள்ள ஊர் பெயர்களே இன்னும் சரியாக இல்லாமல் இருக்கும் போது அதற்குள் ஆங்கிலத்தில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுந்தது.

இதையடுத்து ஊர் பெயர்களை தமிழில் மாற்றி அமைத்து வெளியிட்ட அறிவிப்பை திரும்பப் பெறுவதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அறிஞர்கள் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று கைவிடப்படுவதாக கூறியுள்ள அவர், இது தொடர்பாக விரைவில் புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என கூறியுள்ளார்.

More articles

Latest article