சென்னை:

கொரோனா விவகாரத்தில் அலட்சியமாக இருக்காமல் பரிசோதனை எண்ணிக்கையை உயா்த்துமாறு தமிழக அரசுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

கொரோனா விவகாரத்தில் அலட்சியமாக இருக்காமல் பரிசோதனை எண்ணிக்கையை உயா்த்துமாறு தமிழக அரசுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: கரோனா பரிசோதனைகள் எல்லா மாவட்டங்களிலும் பரவலான முறையில் ஆரம்பத்திலிருந்தே இல்லாமல் போனதால் தமிழகம் இப்போது கடுமையான சவாலை எதிா்கொண்டு நிற்கிறது.தமிழக அரசால் அமைக்கப்பட்ட மருத்துவக் குழு பரிந்துரைத்த அளவுகோலைக்கூடப் பின்பற்றாமல், குறைந்த அளவிலேயே பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில், உள்நாட்டில் பரிசோதனைக் கருவிகளைத் தயாரிப்போா் வெளியிட்டுள்ள அறிக்கை அதிா்ச்சியை ஏற்படுத்துகிறது.தங்களால் மாதந்தோறும் 14 கோடியே 60 லட்சம் பரிசோதனைக் கருவிகளைத் தயாரிப்பதற்கான திறன் உள்ள நிலையில், ஐ.சி.எம்.ஆா் அமைப்பால் சரிபாா்க்கப்பட்ட பரிசோதனைக் கருவிகள் பலவும் எவ்விதப் பயன்பாடுமின்றி வெறுமனே இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அவா்கள் தெரிவித்துள்ளனா்.கூடுதலாக கருவிகள் கொள்முதல் செய்து, நோய்த்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான பரிசோதனைகளின் எண்ணிக்கையை அரசு அதிகரிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளாா்.